Monday, December 31, 2007

பூக்களில் உறங்கும் மெளனங்கள்




உன்
உறவுகள்,இங்கே
உரிமைக்காக
உணர்வுக்காகபோராடுகையில
சத்தமின்றி
சலனமின்றி
இதயங்களை
இரும்பாக்கிக்கொண்டு,
இமைகளை
மூடிக்கொண்டு,
இதழ்களை
பூட்டிக்கொண்டு
இருக்கும்
உன்
மெளனத்தின்
மர்மம்தான் என்ன?

குண்டுமழையால்
குடியிருப்புகள்
மயானங்களாகும்போதும்,
குருதியால்
குழந்தைகள்
குளிப்பாட்டப்படும்போதும்
உணர்வற்றிருக்கும்
உன்
மெளனத்தின்
அர்த்தம்தான் என்ன?

ஆம்
அமைதிப்பூங்காவான
அன்னைப்பூமியில்
அருந்தவப்புதல்வனை
கண் எதிரே
காவுக்கொடுக்கப்பட்டப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
மரத்துப்போய்
மெளனங்கள்தான்
மொழியாக முடியும்.

சில சமயங்களில்
இனசகோதரன்
இரத்தம் சிந்துவதுவதைப்பார்த்து,
இனவுணர்வால்
இரங்கற் கவிதை எழுதுவதும்,
தேசபக்தியால்
இனிப்பு வழங்குவதும்
காணுகையில்
கண்ணீரால்
கரைந்துவிடுகிறேன்.

உன்
உள்ளப்பூக்களில்
உறங்கும்
மெளனங்களை
பார்க்கும்போது
இறைவனிடம்
வேண்டுவது ஒன்றே
ஒன்றுதான்
இனவுணர்வுக்கும்
இறையாண்மைக்கும்
இடையே
இருதலைக்கொள்ளி எறும்பாய்
தவிக்கும் தவிப்பு, எந்த
இனசகோதரனுக்கும்
வந்துவிடக்கூடாது
என்பதுதான்.


Wednesday, September 5, 2007

எலும்புக்கூடுகள்


கண் எதிரே
கன்னியர்
களங்கப்படுவதைக்கண்டும்,
உரிமைகள்
பறிபோவதைக்கண்டும்,
உண்மைகள்
உறங்குவதைக்கண்டும்,
உணர்வற்றிருக்கும்
மனிதர்களைக்காணும்போது
எல்லாம் தோன்றுகிறது.


இரும்பாகிப்போனது
இதயங்கள் மட்டுமல்ல,
கருணையற்றுப்போனது
கண்கள் மட்டுமல்ல,
முடமாகிப்போனது
மூளைகள் மட்டுமல்ல,
பழதாகிப்போனது
பாதங்கள் மட்டுமல்ல,
உடலைவிட்டுப்போனதும்
உயிரும்தான்.


இங்கு
நடமாடுவது எல்லாம்
நவநாகரிக மனிதர்கள் அல்ல,
நகமும் சதையும்
உயிரும் உணர்வுமற்ற
எலும்புக்கூடுகளே?


Sunday, August 26, 2007

மறுபக்கம்



மறுபக்கம் என்பது
நிலவுக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும்
மர்மங்கள்
நிறைந்தது.

Wednesday, August 22, 2007

விழி அசைவில்






பெண்ணே!
அசைவதற்கு
காற்றும்,புயலும்
வேண்டும் பொழது
விஞ்ஞானத்திற்கே
விளங்கவில்லை,உந்தன்
விழியசைவில் விளையும்
விந்தைகளைக் கண்டு,


பெண்ணே!
உந்தன் பார்வை
தரிசனத்தில்
தவங்களும்
சவங்கள் ஆனதுண்டு.
சாமானியனும்
சாதனையாளன் ஆனதுண்டு.





பெண்ணே! உந்தன்
விழிகள் இருக்க
மொழிகள் எதற்கு?


உந்தன் கண் ஜாடை
ஒன்றே போதுமே
எங்கள் காளையருக்கு
மாமலையும்
மண்மேடு ஆவதற்கு.






பெண்ணே!
மலர்
மலருவதற்கே
கதிரவனின்
கடைக்கண் பார்வை
வேண்டும் பொழது


உந்தன்
கடைக்கண் பார்வையால்
உலகம் வாழ்கிறது என்றால்
உண்மை தான்,அதற்கு மனித
உள்ளங்களே சாட்சி.





பெண்ணே!
உந்தன்
கருவிழியின்
கனிமொழியால்
சலனப்படும்
மனங்கள் எல்லாம்
சாந்தி அடையும்பொழது,
தோன்றும்



சந்தோஷம் வேண்டி,
சாமி சன்னதியில்
வரிசையாய் நிற்கும்
கூட்டங்கள்
எதற்காக?



Sunday, August 19, 2007

நம்பிக்கையே வாழ்க்கை


எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

Tuesday, August 14, 2007

௨(2).பிறப்பு






உயிர்
உருவாக
ஆணும்,பெண்ணும்
வேண்டும்பொழது


மழலை என்றுடன்
மங்கையரை மட்டும்
மனம் நோகவைப்பது ஏனோ?






பிறந்தோம்.
வளர்ந்தோம்.
இறந்தோம்.
இது பிறப்பின் பயன் அல்ல.


வாழ்வது ஒருமுறை என்றாலும்
வாழ்த்தவேண்டும் நம்மை தலைமுறை
இதுவே பிறப்பின் பெருமை.


Monday, August 13, 2007

1.நிலவு ஒரு பெண்ணாகி





பால் வடியும் பருவ நிலா
அவள்
பாவை எனும் பெளர்ணமி நிலா
நிதம் நிதம்
அவள் வருவாளே கனவில் உலா



காவியங்கள் அவளை
பாடவேண்டுமே கவிமழா (மழை)
முகமோ முழுநிலா
சொல்லோ
ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா
அவள் விழியிரண்டும்
கணைத்தொடுக்கும் வில்லா
இல்லை இல்லை
அன்புமழை பொழியும் அமுதநிலா



உள்ளமோ முகிலா
நடையோ வண்ணமயிலா
என்றால் ஆம்
அவள் என் உள்ளம்
கவர்ந்த பிறைநிலா

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை