Wednesday, May 14, 2008

அம்மா என்றொரு ஆன்மா



இது கவிஞர் அரிமதி இளம்பரிதி தன் அன்னைப் பற்றி எழுதிய ஒரு கண்ணீர் கவிதை
படிக்க படிக்க கண்ணீரால் உள்ளத்தைக் கரைய வைத்து,நம்முடைய தாயின் நினைவுகளை கண் முன் காட்சியாக காண வைக்கிறது

ஒரு கவிஞன் அழகாக கூறினான்

"வீட்டின் பெயரொ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்"

இந்த அவல நிலை இன்று நாட்டில் தலைத்தூக்கி உள்ளது.
கண்டிப்பாக அன்புக்கு மனிதன் அடிமை ஆகும்போது ஆபாசங்களும், வன்முறைகளும்
நாட்டில் தலைவிரித்து ஆடமுடியாது.அகிலமும் அமைதியாகவும், அழகாகவும் இருக்கும்




அம்மா
நீ முகமெல்லாம் பவுடர் பூசி
பொட்டிட்டு
பூ வைத்து
நடந்து வந்தால்
வருவது
என் அம்மாவா?
அல்லது
அம்மனா? என்று
எனக்கே தெரியாது?
யாரென்று
எனக்கும் புரியாது?
......

எம்.எல்.ஏ.க்களை
அறிந்து வைத்திருந்தேன்
என்ன புண்ணியம்
எமனை மட்டும்
தெரிந்து
வைத்திருக்கவில்லையே
எல்லோரும்
என்னைப்
புரிந்து வைத்திருந்தார்கள்
ஆனால்
அந்த எமனுக்கு மட்டும்
நானென்ன
புரியாதப் புதிராக ஆகி விட்டேனா?
அல்லது
தெரியாத நபராக மாறி விட்டேனா?

.........

மனிதன் என்பவன்
தன்னைப் பற்றியே பேசுவான்
இது மரபு

நீயோ
என்னைப் ப்ற்றி
மட்டுமே பேசுவாய்
இது
உன் இயல்பு

உன்னைத் திட்டினால்
நீயோ
பயந்து விடுவாய்
ஒரு பேச்சிற்காக
உன் மகனான
என்னைத் திட்டினால்
நீயோ
பாய்ந்து விடுவாய்


ஏனம்மா
உன் மகன்
நானென்ன
உனக்கு
இனிக்கும் தேனாம்மா

.............

அம்மா
நீ
அரசு மருத்துவமனையில்
உன்னையே நீ மறந்து
முணுமுணுத்தபோது
மருத்துவர்கள் சொன்னார்கள்
உனக்கு
மூளையில் பிரச்சனையென்று

தாயே
இயற்கையின்
கொடுமையைப் பார்த்தாயா?
நம் குடும்பத்திற்கே
மூளை நீ
உன் மூளையா
முடங்கிப் போயிற்று?
எல்லாம்
காலத்தின் கோலம்
நான் செய்த பாவம்

...........

ஒரேயொரு முறை
விரல் அளவுப் பொருளை
நான்
வாங்கிக் கொடுத்தாலும்
அதனை
எவரெஸ்ட் மலை அளவு
நினைத்துக் கொள்வாய்
நம் வீட்டிற்கு
யார் வந்தாலும் சரி
இது என் புள்ள
வாங்கிக் கொடுத்தது என
புல்லரிக்கச் சொல்வாய்

...............


தாயே
உன் புன்சிரிப்பு
அது
இயற்கைக் கொடுத்த
ஒரு பரிசளிப்பு

.............

உடம்பிற்கு முடியலேப்பா
என்று அடிக்கடிச்
சொல்லிக் கொள்வாய்
ஆனால்
ஓர் ஒலிம்பிக்
வீராங்கனையைப் போல்,
வீடெங்கும்
ஓடி ஆடி
உழைத்து முடிப்பாய்
கடைசியில்,
உடல் வலியால்
நீ
துடிப்பாய்

..................

தாயே
உனக்கும் சரி
எனக்கும் சரி
மனம் சில நேரம்
மணம் இழக்கும்
குணம் பிசகும்
கனமாகி
கடவுளிடம் கூடவே
வேண்டச் சொல்லும்
எல்லாம்
ஒரு நாளில் சரியாகும்
பின் வீடே
குதூகளிக்கும்

மன வருத்தம்
இல்லை யென்றால்
அங்கே
மகிழ்ச்சிக்கு
இடம் ஏது தாயே

உனக்கு
கோபம் வரும் போதெல்லாம்
கொஞ்சலாய் நீ
ஒன்றைச் சொல்வாய்
எனக்கு
உன்னை விட்டால்
வேறு யார் இருக்காப்பா.. என்று

அட போம்மா..
என்னை நீ
நம்பியதற்குப் பதில்
அந்த
எமனையாவது
நம்பியிருக்கலாம்

அவன்
கயிற்றையாவது மாற்றிப்
போட்டிருப்பான்

நீ வாழ
காலத்தையும்
கொஞ்சம்
கூட்டியிருப்பான்

உயிர்ப் பறிக்க வந்த
எமனோ
உன்னைச் சுற்றி

ஊரும், உறவும்
உன் படுக்கையைச் சுற்றி
உன் பார்வையோ
ந்ம் வீட்டைச் சுற்றி

உன் ஆன்மாவோ
சத்தியமாய்
என்னைச் சுற்றி

நான்,
அப்பா,
உன் மருமகள்,மகள்கள்
பேரப் பிள்ளைகள்
இவர்கள் எல்லோரும்
இப்போது
உன் படத்தைச் சுற்றி

இனி என்
வாழ்க்கையே
உன்னைச் சுற்றித் தாயே
...........

இறப்பும் ஒரு வகையில்
இயற்கையின்
திட்டம்தான்
இல்லையென்றால்
இருபத்து நான்கு மணிநேரமும்
உன்னை நான்
நினைத்துக் கொண்டிருப்பேனா?
..............


நம் வீட்டுக்
கூட்டுக் குடும்பத்தில்
நீ மட்டும்
தனிக் குடித்தனம் நடத்த
தனியாக நீயோ
சென்று விட்டாய்

ஏனம்மா?
அப்பா என்ன
ஏதேனும்
தப்பாகப் பேசினாரா?
மகன்
நான் உனக்குப்
பிடிக்கலையா?
மருமகள்
உன்னை என்ன
கவினிக்கலையா?

தனியாக
நீ வேண்டாம் தாயே
எனக்கு
இணையாக
வந்து சேர் உடனே

அம்மா
தனிமை
மிகப் பெரும்
கொடுமை
...............

அம்மா
துவைத்து..துவைத்து
உன் எலும்பும்,தோலும்
எத்தனை முறை
நொந்துப் போயிருக்கும்

பாவம்
உழைத்து, உழைத்துஇ
அவைகளெல்லாம்
உன் இறப்பிற்கு முன்னை
செத்துப் போயிருக்கும்
..................

நம் வீட்டு
குடும்ப விளையாட்டில்
விளையாட
அணிப் பிரிப்போம்
நான் மட்டும்
என் புள்ளப் பக்கம்
நீங்களெல்லாம்
எதிர்ப் பக்கம் என்பாய்
இதை
முந்திக் கொண்டு
நீ சொல்வாய்


இன்று
இப் பக்கம் நானம்மா
திசைத் தெரியாமல்
எப்பக்கம்
நீ அம்மா

......................






Sunday, May 11, 2008

அன்னை என்னும் தெய்வம்




கண்ணுக்கு தெரியாதவன்
ஆண்டவன்
கண் முன்னே
காட்சி அளிக்கும்
கடவுள் என்றால்
அது
அன்னை அல்லவா


ஆண்டவனைத் தொழ
அகிலத்தில்
ஆயிரம்
ஆலயங்கள் இருந்தாலும்
அன்னையில் சிறந்த
கோவிலும் இல்லை.

அன்பைப் பொழிய
அறிவை ஊட்ட
அனைத்தும் கற்றுத் தர
ஆண்டவனின்
அவதாரமாய்
தாய் என்றும்
தாரம் என்றும்
பெண்மைக்கு தான் எத்தனை
பெருமை



அதிசியம் என்றும்
ஆண்டவன் என்றும்
அவதாரம் என்றும்
அன்னையை
அபிஷேகிக்கப்பிதை விட்டு
அன்பைப் பொழிவோம்
முதியோர் இல்லங்கள்
மூலைக்கு மூலை
முளைப்பதை
முளையிலே அழிப்போம்



கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை