Showing posts with label தமிழ் அமுதம். Show all posts
Showing posts with label தமிழ் அமுதம். Show all posts

Tuesday, April 1, 2008

வருவாய்,வரும்படி


தமிழின் அழகே சொற்களை எப்படி கையாளுவது என்பதில் தான் உள்ளது.அப்படி பயன்படுத்தும்போது,அது அனைவரின் பார்வையைக் கவரும்.அந்த வகையில் நாடோடி இலக்கியனின் "உஷார் காதல்...!" கவிதைக் கூறலாம். ஒருமுறை அந்த வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்



காதலோடு காத்திருந்தேன்
நீ வருவாய் என
வந்த உடன் கேட்டாய்
"உன் வருவாய் என்ன?"



வருவாய் என்றச்சொல் அதற்கு சாட்சி.

இந்த கவிதைப்படிக்கும்போது,புத்தக்கத்தில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.

கலைஞர் அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி.
கழகத்திற்காக நிதி திரட்ட கலைஞர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வந்தார்.

அப்பொழுது கந்தர்வ கோட்டையிலிருக்கும் நண்பர் ஒருவர் கலைஞருக்குக் கடிதம் எழுதி தன்
ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.கலைஞரும் அழைப்பிக்கிணங்கி, கழக நிதியைப்
பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.


"கந்தர்வகோட்டைக்கு 'வரும்படி' என்னை அழைத்தார்கள். "வரும்படி" என்றால் கழகப்பொருளாளர் வராமல் இருப்பேனா? "
என்று கலைஞர் கூறியதும் கூட்டத்தில் பலத்த கை ஓசை எழுந்தது.


இங்கே வரும்படி அதற்கு சாட்சி.


தமிழை வாசிப்போம்.. தமிழை நேசிப்போம்.. தமிழையே சுவாசிப்போம்

என்றும் அன்புடன்

உங்கள் திகழ்மிளிர்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை