Showing posts with label திகழ். Show all posts
Showing posts with label திகழ். Show all posts

Wednesday, July 6, 2011

காடுமலை கடந்து...



காடுமலை கடந்துவந்தோம் அய்யா - உனைக்

கண்குளிர காணவந்தோம் அய்யா - அருள்
நாடிபுகழ் பாடிவந்தோம் அய்யா - உந்தன்
இணையடியை வணங்கவந்தோம் அய்யா
(காடுமலை...)

மலையெல்லாம் குடிகொண்டாய் அய்யா - பக்தர்
மனமெல்லாம் குடிகொண்டாய் அய்யா - தங்கச்
சிலையாகி நிலைகொண்டாய் அய்யா - கடுங்
சினம்கொண்டு மலைகொண்டாய் அய்யா
(காடுமலை...)

மறைபுகழும் மால்முருகன் அய்யா - தமிழ்
மணம்கமழும் வேல்முருகன் அய்யா - நமைச்
சிறைகொண்ட திருமுருகன் அய்யா - சிவ
மந்திரத்தின் குருமுருகன் அய்யா

(காடுமலை...)

மயிலோடு வலம்வருவாய் அய்யா - உடனே
மனமிறங்கி வரம்தருவாய் அய்யா - உயிர்ப்
பயம்நீங்கி பலம்தருவாய் அய்யா - என்றும்
அன்னையாகி கரம்தருவாய் அய்யா

(காடுமலை...)


பொய்கையிலே அவதரித்தாய் அய்யா - சுடும்
பொய்களெல்லாம் அழிக்கவந்தாய் அய்யா - உயிர்
மெய்யாகி தவழ்ந்துவந்தாய் அய்யா - சொல்
செயலாகி விழித்துநின்றாய் அய்யா

(காடுமலை...)

Sunday, June 26, 2011

ஆலயம்...





ஆலயம் என்பது அவன் வீடு
அதிலே அவனைத் தினம் தேடு

அன்பே அவனது ஆலயம்
அகமே அவனது ஆலயம்
அதுவே ஆண்டவன் ஆலயம்

(ஆலயம்....)




வேண்டும் வரம் தருவானாம்
வேதனை எல்லாம் தீர்ப்பானாம்

நல்லதை நினைத்தால்
நன்மையைச் செய்தால்

வேண்டும் வரம் தருவானாம்
வேதனை எல்லாம் தீர்ப்பானாம்

(ஆலயம்...)


பழமும் பாலும் வேண்டாமாம்
ஆடும் மாடும் வேண்டாமாம்

அன்பைப் பொழிந்தால்
அருளைச் சுரந்தால்

அதுவே அவனுக்குப் போதுமாம்
அதுவே அவனுக்கு வேணுமாம்

(ஆலயம்...)

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை