
கண் எதிரே
கன்னியர்
களங்கப்படுவதைக்கண்டும்,
உரிமைகள்
பறிபோவதைக்கண்டும்,
உண்மைகள்
உறங்குவதைக்கண்டும்,
உணர்வற்றிருக்கும்
மனிதர்களைக்காணும்போது
எல்லாம் தோன்றுகிறது.
இரும்பாகிப்போனது
இதயங்கள் மட்டுமல்ல,
கருணையற்றுப்போனது
கண்கள் மட்டுமல்ல,
முடமாகிப்போனது
மூளைகள் மட்டுமல்ல,
பழதாகிப்போனது
பாதங்கள் மட்டுமல்ல,
உடலைவிட்டுப்போனதும்
உயிரும்தான்.
இங்கு
நடமாடுவது எல்லாம்
நவநாகரிக மனிதர்கள் அல்ல,
நகமும் சதையும்
உயிரும் உணர்வுமற்ற
எலும்புக்கூடுகளே?
