Tuesday, April 29, 2008

அன்பே சிவம்



ஆண்டவனின்
அருள் வேண்டி
ஆலயத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
அன்பளிப்பை
அளிக்கின்றாய்.

ஆண்டவனை
சிற்பங்களிலும்
சிலைகளிலும்
கற்களிலும்
உருவம் கொள்கிறாய்.

அவனோ
உயிருள்ள
உள்ளங்களில்
உறைந்து
உள்ளதை
உணர மறுக்கின்றாய்.

பகவானுக்கு செய்வது
புண்ணியக்கணக்காக மாறும் என்று
எண்ணிக்கொண்டு
பரிதவிக்கும் உள்ளங்களுக்கு
பரிவுக்காட்டாமல்
பாவக்கணக்கை இரட்டிப்பு
ஆக்கிக்கொண்டிருக்கிறாய்.

ஆராதனைகளிலும்
அபிஷேகங்களிலும்
ஆண்டவனின்
அனுதாபத்தை
அடைந்திட
அனுதினமும்
அலைக்கின்றாய்.

அஸ்திகளை
அள்ளிக்கொடுத்து
ஆசிரமங்களையும்
ஆபாச சாமியார்களையும்
அரவணைக்கின்றாய்.

ஆண்டவனே உருவான
அன்புள்ளங்கள் இருக்கும்
அனாதை இல்லங்களை
ஆதரிக்க மறுக்கின்றாய்.


மக்களுக்கு செய்வதே
மகேசனுக்கு செய்வது என்று
மனம் உணர
மறுக்கின்றாய்.

அன்பும்
சிவனும் வேறு அல்ல.
இரண்டும் ஒன்றே என்று
உணர்ந்திடு
அதுவே
அவனின்
மந்திரம் என்று
அறிந்திடு



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

திருமணம்





இரு கண்கள் நோக்கி
இரு பெயர்கள் எழுதி
இரு கைகள் கோர்த்து
இரு உடல்கள் இணைந்து
இரு உதடுகள் நனைந்து
இருப்பது மட்டுமல்ல,

இரு இதயங்கள் பரிமாறி
இரு உள்ளங்கள் ஒன்றாகி
இருவரின்
உணர்வுகளை மதித்து
சுக துக்கங்களையும்
பிள்ளை வளர்ப்பையும்
சரிசமமாய் சுமந்து
அடுப்பங்கரையும்
பள்ளியறையும் பகிர்ந்து
தாயாய்
தந்தையாய்
தோழியாய்
தோழனாய் இருந்து
உறவாடும்
உன்னதமான
உறவுக்கு பெயர் தான் திருமணம்.




(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

Monday, April 28, 2008

திபெத்

Sunday, April 20, 2008

இதயம் இரண்டாகிறது !!!




இல்லம் என்றதும்
இதயம்
இரண்டாகிறது !!!
இருமனங்கள்
இணையும்
திருமணத்திற்குப் பிறகு
தாய் என்றும்
தாரம் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இலங்கை என்றதும் கூட
இதயம்
இரண்டாகிறது !!!
இந்தியாவில்
இந்திராவின் மூத்த‌ மகன்
இறந்த பிறகு
இந்தியன் என்றும்,
தமிழன் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இவற்றையெல்லாம் கண்டு
இருக்கையிலே
இதயம் இயம்புவது
இதுதான்

"இன்னலைத் துடைக்க‌
இயலாமல்
இருப்பதை விட‌
இறப்பதே மேல் என்று "



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)


Wednesday, April 16, 2008

தோல்வி ( சின்னம் - 3 )






சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.



தோல்வியும் ஒரு சின்னம் தான்.ஆம்
துவண்டுவிட்டால்
தோல்வியும் ஒரு சின்னம் தான்
துணிந்துவிட்டால்
சின்னங்கள் எல்லாம்
பின்னங்களாகும்.
வெற்றிகளே
முழு எண்(ணங்)களாகும்.

உடல் வலியை நீக்க
ஆயிரம் மருந்துகள் உண்டு.
மன வலியைப் போக்க
மார்க்கமுண்டு என்றால்,அது
நம்பிக்கையே.

நம்பிக்கையுடன்
நடைப்போடுங்கள்
நாளைய உலகம்
நம் கைகளிலே.



அன்பு

மழலைச்செல்வம்



Tuesday, April 15, 2008

நேபால்



அன்று
மன்னராட்சி
இன்று
மாவோயிஸ்டு ஆட்சி

மக்கள்
மனங்களில்
மகிழ்ச்சி பிறக்கட்டும்.

ஆயுதங்கள் அற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு அற்ற
அமைதியான வாழ்க்கை
அமையட்டும்.


prajavani.net

Tuesday, April 8, 2008

நினைவு நதி







நினைவு
நதியில்
நீந்தும்பொழது எல்லாம்
நாம்
நனைந்து விடுகிறோம்

மனத்தில்
மறுக்கமுடியாத
மகாத்மாவும்
மட்டுமல்ல
இரக்கமற்ற
இடி அமீனும்
இதயத்தில்
இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்
இருக்கும்பொழது
இல்லத்தாரிடம்
எல்லோரிடமும்
வெறுப்பை
காட்டாதீர்கள்,அது
நம் இறப்பிறகு பின்னும்
கனலை கக்கும்

நினைவு என்பது
தீச்சுவலைப் போன்றது
அதை
அணைப்பது என்பது
அவ்வளவு எளிதல்ல

வேதனையைச் சுமந்து
குடும்பத்தைப் பிரிந்து
குதூகலத்தை மறந்து
அகவை தொலைத்து
அயல் மண்ணில் வாழும்
ஊழியர்களின்
உறவுகள் எல்லாம்
நினைவுகள் தான்

ஆம்
நீங்காத
நினைவுகள்
இதயத்தில்
இருக்கும் வரை
தொலைவுகள் எல்லாம்
தொடும் தூரத்தில் தான்





























Tuesday, April 1, 2008

நேரம்


நேரத்தை திட்டமிடுவதில் தான் வாழ்க்கை என்பதே அடங்கி உள்ளது.




1.வாசிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது அறிவின் ஊற்று.





2.விளையாட நேரத்தை ஒதுக்குங்கள்.
அது இளமையின் இரகசியம்.






3.அன்பு செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள்.
அது வாழும் வாழ்க்கைக்கான வழி.






4.சிரிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது உள்ளத்தின் உத்வேகத்திற்க்கான வழி.






5.சிந்திக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது நாளைய வாழ்க்கைக்கான வழி.





6.உழைக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது வெற்றிக்கான வழி.

வருவாய்,வரும்படி


தமிழின் அழகே சொற்களை எப்படி கையாளுவது என்பதில் தான் உள்ளது.அப்படி பயன்படுத்தும்போது,அது அனைவரின் பார்வையைக் கவரும்.அந்த வகையில் நாடோடி இலக்கியனின் "உஷார் காதல்...!" கவிதைக் கூறலாம். ஒருமுறை அந்த வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்



காதலோடு காத்திருந்தேன்
நீ வருவாய் என
வந்த உடன் கேட்டாய்
"உன் வருவாய் என்ன?"



வருவாய் என்றச்சொல் அதற்கு சாட்சி.

இந்த கவிதைப்படிக்கும்போது,புத்தக்கத்தில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.

கலைஞர் அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி.
கழகத்திற்காக நிதி திரட்ட கலைஞர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வந்தார்.

அப்பொழுது கந்தர்வ கோட்டையிலிருக்கும் நண்பர் ஒருவர் கலைஞருக்குக் கடிதம் எழுதி தன்
ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.கலைஞரும் அழைப்பிக்கிணங்கி, கழக நிதியைப்
பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.


"கந்தர்வகோட்டைக்கு 'வரும்படி' என்னை அழைத்தார்கள். "வரும்படி" என்றால் கழகப்பொருளாளர் வராமல் இருப்பேனா? "
என்று கலைஞர் கூறியதும் கூட்டத்தில் பலத்த கை ஓசை எழுந்தது.


இங்கே வரும்படி அதற்கு சாட்சி.


தமிழை வாசிப்போம்.. தமிழை நேசிப்போம்.. தமிழையே சுவாசிப்போம்

என்றும் அன்புடன்

உங்கள் திகழ்மிளிர்

படம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை