Wednesday, September 3, 2008

அ என்றால் அம்மா தொடர் பதிவு ( A For Apple ... )



சும்மா இருந்த என்னை இந்த தொடர் பதிவு விளையாட்டிற்கு
அழைத்த அருமை நண்பர் விஷ்ணுவிற்கு எனது நன்றிகள்.

எண்ணற்ற இணையத்தளங்கள் இருந்தாலும் இதயத்தில் இடம்பிடிப்பவை ஒரு சிலதே.

"அ என்றால் அம்மா" என்பதை போல் அடியேனின் அகத்திலும்
அடிக்கடி நுழையும் இணையத்தளங்கள் இவைகளே.

படிக்கும் பலருக்கு பயனளிக்கும் என்பதால்
பதிவுமிட்டு பட்டியலும் இட்டு உள்ளேன்.

A
http://answers.com
அனைத்து வகையான தகவலுக்கான தளம்

http://aiyoo.org
பசியாறும் பொழுது படம் பார்க்க உதவி செய்வது உடன் உணவை உள்ளே தள்ளி உடல் பெருக்கம் என்னும் உயர்ந்த பணியை செய்வது.


B

http://bangalorelive.in
"பெங்களூரு" பற்றிய செய்திக்காக நாள்தோறும் படிப்பது.

D

http://designmyroom.com/
கட்டடக்கலையின் மேலுள்ள ஆர்வத்தால் அடிக்கடி போவது உண்டு.


http://dpreview.com/

நிழம்பி (camera) பற்றிய விவரங்களுக்காக செல்வது.

http://dictionary.reference.com/

ஆங்கிலத்தை அறிந்து கொள்ளவும் தமிழ் சொல்லாக்கம் முயற்சிக்காக செல்வது.

E

http://www.everydayhealth.com
உடல் நலன் பற்றிய தகவல்களைத் தரும் தளம்.

http://dailythanthi.com

சில நாளிதழ்கள் தமிழுக்கும் ஈழ மக்கள் நலனுக்கும் எதிராக இருப்பதால், தமிழ் மேல் கொண்ட பற்றால் விரும்பி படிக்கும் செய்தித்தாள்.

F

http://football365.com/
சிங்கை வந்த பிறகு எங்கு திருப்பினும் கால்பந்து
அதனால் அடியேனும் அதற்கு அடிமையான தளம்.


G

http://www.google.com.sg/
அனைத்துக்கும் அடைகலம் அடையுமிடம்.

http://www.mozilla.com/en-US/

இணையத்தின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்திய உலாவி. தமிழ் விசை போன்ற இணையுதவிகளை (add ons)உள்ளடக்கி இருப்பதால்.

K

http://kannadaaudio.com/
எனது கண்கள் இரண்டு என்றால் கன்னித்தமிழும்
கன்னடமும் என்று சொல்வேன்.
தமிழை படிக்கவிட்டாலும் கன்னடப்பாடலை
செவிகளில் கேட்கவிட்டாலும் இருக்கமுடியாது.


L

http://www.lovefoodhatewaste.com/
காய்கறி,உணவு பற்றிய அரிய செய்திகளைச் சொல்வது.


M

http://www.makeuseof.com/
இணையத்தகவல்களையும் அள்ளித் தரும் இணையத்தளம்.

N

http://www.nationmaster.com/
அகிலம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது என்பதைப் பறையும் தளம்.

S


http://www.sciencedaily.com/

அறிவியலைப் பற்றிய அருமையான தகவல்களை தரும் தளம்.

http://www.smugmug.com/
புகைப்படங்களைப் பார்க்க போகும் இணையத்தளம்.

http://www.streetdirectory.com/
சிங்கை சுற்றுவதற்கு சுற்றுலா வழிகாட்டியாய் உதவும் தளம்.


V

http://www.veoh.com/
படங்களைப் பார்க்க பயன்படும் அருமையான தளம்.


மூவரை அழைக்கவேண்டும். அதனால்
மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

கவிதைக்காக வலைப்பக்கம் சென்றமையால்
வலையை அதிகமாக விரிக்க வேண்டி உள்ளது.

அதிகமாக ஆழமாக சிந்தித்தால்
அகப்பட்ட அரிமாக்கள் (சிங்கங்கள்) இவர்கள்
அய்யோ என்று
அலறுவது கேட்கின்றது,
அடிக்கவும் வருவது தெரிகின்றது
அதாவது அன்பால், தயது செய்து
அடியேனை மன்னிக்கவும்



1. அன்பு நண்பர் U.P.Tharsan அவர்கள்(கவிதையாலும் இணையத்தகவல்களாலும் கலக்கிக் கொண்டு இருப்பவர்)

2.அன்பு தோழி Divyapriyaஅவர்கள் (தன்னுடைய நகைச்சுவை பதிவுகள் நம்முடைய நெஞ்சங்களை அள்ளிக் கொண்டு இருப்பவர்)


3. அன்பு தோழி தாரணி பிரியாஅவர்கள்
(பதிவுகளால் பலரின் கவனத்தை கவர்ந்தவர்)

விதிமுறைகள்

1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.

2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.

3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.

4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் அ என்றால் அம்மா அதாவது A For Apple

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை