
ஆண்டவனின்
அருள் வேண்டி
ஆலயத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
அன்பளிப்பை
அளிக்கின்றாய்.
ஆண்டவனை
சிற்பங்களிலும்
சிலைகளிலும்
கற்களிலும்
உருவம் கொள்கிறாய்.
அவனோ
உயிருள்ள
உள்ளங்களில்
உறைந்து
உள்ளதை
உணர மறுக்கின்றாய்.
பகவானுக்கு செய்வது
புண்ணியக்கணக்காக மாறும் என்று
எண்ணிக்கொண்டு
பரிதவிக்கும் உள்ளங்களுக்கு
பரிவுக்காட்டாமல்
பாவக்கணக்கை இரட்டிப்பு
ஆக்கிக்கொண்டிருக்கிறாய்.
ஆராதனைகளிலும்
அபிஷேகங்களிலும்
ஆண்டவனின்
அனுதாபத்தை
அடைந்திட
அனுதினமும்
அலைக்கின்றாய்.
அஸ்திகளை
அள்ளிக்கொடுத்து
ஆசிரமங்களையும்
ஆபாச சாமியார்களையும்
அரவணைக்கின்றாய்.
ஆண்டவனே உருவான
அன்புள்ளங்கள் இருக்கும்
அனாதை இல்லங்களை
ஆதரிக்க மறுக்கின்றாய்.
மக்களுக்கு செய்வதே
மகேசனுக்கு செய்வது என்று
மனம் உணர
மறுக்கின்றாய்.
அன்பும்
சிவனும் வேறு அல்ல.
இரண்டும் ஒன்றே என்று
உணர்ந்திடு
அதுவே
அவனின்
மந்திரம் என்று
அறிந்திடு
(வ.வா.சங்கம் போட்டிக்காக..)