சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குழந்தையும் ஒரு சின்னம் தான்,ஆம்
நாளைய தலைமுறையின் அடையாளம்.
குழந்தை
குடும்பத்தில் பிறந்தால்
குதூகலத்தின் சின்னம்.
அதுவே
மற்றோரு பெண் பெற்று எடுத்தால்
அவமானத்தின் சின்னம்.
மழலைச்செல்வங்களைப் பெற்றிட
ஆயிரம் நவீனமுறைகள் இருந்தாலும்
அம்புகள் நோக்கிப்பாய்வது
ஆண்களை அல்ல, பெண்களைத்தான்
அறிவியல் வளர்ந்தாலும்
அறியாமையும்
ஆணாதிக்கமும் இருக்கும்வரை
வேதனை எல்லாம்
பேதை பெண்களுக்குதான்.