
இறைவா ! ஏன்
இந்த சோதனை
இழந்த
இழப்புகள் தான் எத்தனை
இன்னும் தொடரவேண்டுமா?
இந்த வேதனை
என்று என்
இன மக்களுக்கு கிடைக்கும் விடுதலை
குட்டிக்குட்டி
கிராமங்கள் எல்லாம்
சுயாட்சியை அறிவித்து விட்டு
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும் பொழுது, என்
இதயம் விம்முவது
இது தான்
இறைவா நீ
இருக்கின்றாயா
இல்லை
இறந்துவிட்டாயா என்று தான்
ஊடகங்களில் தான்
எத்தனை வதந்திகள்
கை,கால்,உயிர் வைத்து
எத்தனை செய்திகள்
கேட்க கேட்க
உடைந்துவிடுகிறது
உள்ளம்
வழி நடத்த தலைமை இன்றி
வழி தவறி
விடுமா ? இந்த
விடுதலை வேள்வி
இல்லை
கொடுக்கப்பட்ட,
கொல்லப்பட்ட
உயிர்களின் மதிப்புகள்
அவ்வளவு தானா?
இந்த உயிர்
இருக்கையில்
என் சொந்தங்கள்
உரிமையுடன் வாழும்
காட்சியை
கண் கொண்டு
காணாமலே
கண் மூடிவிடுவேனோ?