
ஆட்சித்தேவதை
ஆட்சியாளருக்கு
அருளிய வரம்
***************
பா(த்தி)ரம்
பாத்திரங்களோடும்
பாத்திரங்களாகவும்
பல்லாயிரம் ஆண்டுகளாக
பாரம் சுமைப்பவளாக
பெண்

***********************
தீ(ர்)வு

தனிமை
தீர்வு அல்ல
தீவு ஆகும்.
******************
இ(ள)மை

இளமையில்
படிக்கவும்
உழைக்கவும்
சேமிக்கவும் செய்தால்
அதுவே
முதுமைக்கு இமை
***********************