

நீதி நேர்மை
நினைத்துப் பார்த்தால்
நாளும் வறுமை

சட்டைப் பையில் சட்டம்
சக்தி உள்ளவர்களுக்கு
செலவழிக்க என்ன கஷ்டம்


சின்ன ஓட்டை
செல்ல செல்ல
சீரழிக்கிறது நாட்டை


பட்டப் பகலில் கொள்ளை
பார்த்துச் சொன்னால்
பெற்றெடுக்க வேண்டுமாம் பிள்ளை


அடுத்த அடுத்த கட்டம்
என்றே அலைக்கழிக்கும்
ஏழைகளை என்றும் சட்டம்
