
(Thanks - SanjaiGandhi )
மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...
இத்தனையும் இருந்து என்ன ? இன்னும்
எத்தனை நாள் நான் இருப்பேன் ?
இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் மனிதப்பந்தங்கள் எல்லாம் ...
மண்ணை நேசித்தது
மாபெரும் குற்றமென எண்ணி
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...
தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !
பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.