
அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல்...
உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல்...
அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல்...
புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை
அறியாமல்...
உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல்...
நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல்...
மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை
அறியாமல்...
என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !!!
( படித்ததில் பிடித்தது - வாஞ்சி கோவிந்தராசன் அவர்கள் எழுதிய கவிதை )
*************************************************
இன்னும் சில தேடல் தொடர்புடைய கவிதைகள்
1.கவிநயா அவர்களின் கவிதை
2. சி. கருணாகரசு அவர்களின் கவிதை