
கண்ணீர்க்கடலில்
தத்தளிக்கும்பொழுது எல்லாம்
கலங்கி விடாதே ...
வள்ளமும் உன்னிடம் உண்டு
வரைப்படமும் உன்னிடம் உண்டு
வழிநடத்த மாலுமியாய் நீயும் உண்டு
வேறு என்ன வேண்டும்
வேதனையைத் துடைத்திடு ...
அடைந்திடுவோம்
அக்கரை மட்டுமல்ல,
எக்கரையும் தான்
ஏனென்றால்
எல்லாம் உன்னிடம் உண்டு.
( வார்த்தைகளாகவும் வரிகளாகவும் கிறுக்கியவை.)