
அடி எடுத்து வைக்கும்
ஆண்டில்
இன்னல்கள் எல்லாம் தொலையட்டும்
ஈழமக்களின் வாழ்க்கை மலரட்டும்
உலகெங்கும் அமைதி நிலவட்டும்
ஊழலற்ற சமுதாயம் அமையட்டும்
எழுதட்டும் புதுவரலாறு
ஏழ்மையும் வறுமையும் அகலட்டும்
ஒழியட்டும் வன்முறையும் கலகமும்
ஓதட்டும் தமிழரெல்லாம் தமிழ்மொழியை
ஔடதமே வாழ்வென்று இல்லாமல் ஆகட்டும்
அஃதே தமிழ்ப்புத்தாண்டின் நோக்கம் ஆகட்டும்
***************************************************

பொங்கல் வந்தது...
வீட்டை சுத்தம் செய்து
வேண்டியவை மட்டும்
உள்ளே வைத்து
வேண்டாததை வெளியே தள்ளி
அத்துணை அழுக்குகளையும்
அகற்றி வெள்ளையும் அடுத்து
அழகாவும் ஆக்கினோம்...
அதைப் போலவே ஆக்க முடியுமா
அழுக்காயும் அடர்த்தியாயும்
இருக்கின்ற மனதை... ?
முடிந்தால்
பொங்கலோ பொங்கல்... !
********************************************
பொங்கல் கவிதை ----- செல்மா காமராசன் அவர்கள்
****************************************