கத்தியை எடுத்தாயிற்று...
கத்தினாலும்
காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை...
வேண்டியது நெத்தம்
வேதனை யாருக்கு வேண்டும் ?
பிணமாகுபவனைப் பற்றிக் கவலையில்லை
பணம் வந்தால் சரி...
சந்ததி அழுதால் எனக்கென்ன ?
சந்தோசம் தான் முக்கியம்...
காரியம் முடிந்தாயிற்று...
காலையில் தெரிந்துவிடும்.
ஆழம் எவ்வளவென்றும்,
ஆயுதம் எதுவென்றும்...
தண்ணீர் வேண்டி
மண்ணைத் துளை போட்டதில்
கண்ணீரைக் கொட்டி
கொலைப் பட்டுக் கிடக்கிறது
பூமி...
