எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
பால் வடியும் பருவ நிலா அவள் பாவை எனும் பெளர்ணமி நிலா நிதம் நிதம் அவள் வருவாளே கனவில் உலா
காவியங்கள் அவளை பாடவேண்டுமே கவிமழா (மழை) முகமோ முழுநிலா சொல்லோ ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா அவள் விழியிரண்டும் கணைத்தொடுக்கும் வில்லா இல்லை இல்லை அன்புமழை பொழியும் அமுதநிலா
உள்ளமோ முகிலா நடையோ வண்ணமயிலா என்றால் ஆம் அவள் என் உள்ளம் கவர்ந்த பிறைநிலா