Tuesday, December 23, 2008

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - குறள் சொல் விளக்கம்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இக்குறளுக்கு சொல் விளக்கம் காண்போம்.

இருவினை என்பதின் விளக்கம்

இருவினை என்றால் நல்வினை, தீவினை என்று சொல்லப்படும்.
அதாவது
இன்பம்-துன்பம் , நன்மை-தீமை , பிறப்பு- இறப்பு என்பதைப் போல்.

இருவினை என்பது நல்வினை , தீவினை என்றால் நல்வினை எது தீவினை எது
என்று பாகுபாடு செயவது மிகவும் கடினமாக இருக்கிறது.

எடுத்துக்காட்காக
திருட்டு திருடனுக்கு நல்லதாக தோன்றுகிறது.அதுவே பிறருக்குத் தீமையாக விளைகிறது. நாட்டுக்காக உயிர் துறப்பது நாடு என்ற அமைப்பிறகு நல்லதாக
தோன்றும், மனித உயிர்கள் மரிக்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தீயதாக
கருதப்படும். இதனைப் பார்த்தால் பிறருக்கு நன்மை விளைப்பது நல்வினை என்றும், தீமை விளைப்பது தீவினை என்றும் வரையறை கொள்ள வேண்டியுள்ளது.

புலவர் குழந்தை அவர்கள் இருவினை என்பதற்கு பெரிய துன்பம் என்று பொருள்
கொள்வார்.


சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.


என்னும் குறளை உதாரணம் காட்டி,

இறைவனின் புகழைப் பாடினால் சிறிய துன்பம் மட்டுமல்ல,பெரிய துன்பம் வராது என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுகிறார்.


சோம்பேறிக்குச் சோறு போடுவது நல்லதா கெட்டதா ? பசியைப் போக்குவது என்ற முறையில் நல்லது. மேலும் சோம்பேறியாக்கி நம்மை ஏமாற்ற வழிசெய்கிறது என்ற முறையில் கெட்டது.

இதனால் தான் அவற்றை இருள் என்று சொல்ல வேண்டியுள்ளது.

நீச்சல் தெரியாத ஒருவன் தவறி, கிணற்றில் விழுந்துவிட்டான். மற்றொருவன் அதனைக் காப்பாற்றுகிறான்.பிழைத்தவன் காப்பாற்றியவனைப் பாராட்டுகிறான்.நன்றியுணர்வுடன்
நடந்து கொள்கிறான். காப்பாற்றிய செயல் முடிந்துவிட்டது. அதற்காக நன்றியுணர்வு காட்டுவதால் யாரும் நன்மை ? நன்றியுணர்வு காட்டாவிட்டால் யாருக்குத் தீமை ? உதவும் குணம் என்றும் உதவும். மறக்கும் குணம் என்றும் மறக்கும்.

இதனால் தான் " இருவினையும் சேரா " என்றார்.

கடவுளை ஒருவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடவுள் உதவுவார். பாராட்டுதல் நன்றியுணர்வு. பாராட்டாமை நன்றியின்மை . அவ்வளவுதான்.

கண்டபடிப் தின்றால் வயிற்றுவலி உண்டாகும்.மருந்து மூலம் வலி நீங்குகிறது. இங்கே மருத்துவர் கடவுள் ஆகிறார். மருத்துவரைப் பாராட்டுவதால் நமக்கு நன்மையோ தீமையோ விளைவதில்லை.

இவற்றை இருள்சேர் இருவினை என்று ஏன் சொல்ல வேண்டும் ? இருள் என்பது புலப்படாத் தன்மை.

நன்மையா - தீமையா ? மருந்து காப்பாற்றியதா - மருந்தின் தூண்டுதலால் உடல் தேறியதா ?
எல்லாம் மயக்க நிலை. அதுவே இருள்.


புகழ் என்பதின் விளக்கம்

இருள் அதன் எதிர்ச்சொல் ஒளி ஆகும். அறை இருட்டாக இருந்தால் விளக்கு ஏற்றினால் ஒளி வந்துவிடுகிறது. இங்கே இருள் என்பது மனிதனையும் , ஒளி என்பது இறைவனையும் குறிக்கும். இறைவனின் அடியை அல்லது புகழைப் வாழ்க்கையில் நம்முடைய இருள் போன்ற துன்பங்கள் விலகும்.


புரி என்பதின் விளக்கம்

செயல்புரி என்றால் செயலாற்று என்றும் செயலை விரும்பு என்றும் பொருள் கொள்கிறோம். அதுபோல, புகழ் , புரி என்பதற்கும் பொருள் காண வேண்டும்.

கயற்றில் இரண்டு புரிகள் உள்ளன. 3 , 4 , 5 புரிகள் உள்ள கயிறுகளும் உண்டு.
புரிகள் ஓன்றோடொன்று முறுக்கி இருப்பத போல் இறைவனை நாம் புகழால் முறுக்க வேண்டும்.

புரிநூல் அதாவது இறைவனிடமுள்ள பாச முறுக்கு உடையாம இருக்க இறைவனும் நாமும் சேர்ந்து நூல் கயிறாக மாற வேண்டும். அதுதான் புரிதல் ஆகும். புகழ் என்பது இங்கு முறுக்குதலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிதல் என்னும் வினையால் அறியலாம்.

மாட்டு என்பதின் விளக்கம்

மாட்டு என்பது இறைவனும் நாமும் புகழ் என்னும் முறுக்கால் மாட்டிக்கொள்வதை உணர்த்துவதை உணரமுடியும்.

பொருள் என்பதின் விளக்கம்

இறைவனுக்குப் புகழ் உண்டு. அது நிலையானது.

மனிதனுக்கும் புகழ் உண்டு . அது இறைவனை அடைவதால் உண்டாகுவது .அது பொருளை அடைவதால் வருவது

அந்த பொருள் தான் மெய்ப்பொருளாகிய இறைவன்.

( செங்கை பொதுவனின் கடவுளின் நினைவுகள் என்னும் நூலில் இருந்து )


குறள் இன்பத்தைச் சுவைக்க விரும்புவர்
இந்த வலைப்பக்கத்திற்கு செல்லவும்

திருக்குறள் - Thirukkural

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை