Tuesday, December 30, 2008

நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும் ( மீள்பதிவு )

இது ஒரு நகைச்சுவை பதிவு தான் .யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இது ஒரு மீள்பதிவு. மஹிந்த ராஜபக்ஷ ஆகட்டும், புஷ் ஆகட்டும் இருக்குவரை மனித உரிமை என்பதற்கு விடிவே இல்லை.

இந்த புத்தாண்டு உலக நாடுகளில் அல்லல்கள் மறையவும், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள இடி அமீன்களிடமிருந்து மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவும் , இந்திய அரசின் இதயங்களில் ஈரம் சுரக்கவும் இறைவனை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

...........................................................

தலைப்பைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறதா!!! நூறு சதவீதம் தமிழ்த்திரைப்படத்தலைப்பு தான்.
யார் யாரோ நடிக்கும்பொழது ஏன் நான் திரைக்கதை எழுதி இயக்கக்கூடாது என நினைத்தேன். உடனடியாக ஒரு தலைப்பைத்தேடி கண்டுப்பிடித்து சங்கத்தில் பதிவுச்செய்தேன்.எதற்கு என்றால் நம்ம ஆசாமிகள் உரிமை கொண்டக்கூடாது மட்டுமல்ல ஹாலிவுட் பசங்க என்னுடையது சொல்லக்கூடாது பாருங்க அதுதான்.இப்ப எல்லாம் மேலை நாட்டுப்பசங்க நம்முடைய மஞ்சள்,பாசுமதி அரிசி,யோகாசனத்தை அவங்க கண்டுப்பிடித்த மாதிரி பதிவுரிமை வாங்கிட்டு இருக்கிறார்கள்.நம்ம அரசாங்கம் தான் கோமாளி மாதிரி இருக்குது என்றால் நான் முட்டாள் ஆகி விடக்கூடாது பாருங்க அதுதான்.விளக்கம் வேண்டாம் விசியத்து வா என சொல்வது காதில் விழுகிறது. கதை கேக்கிறங்களா? அமெரிக்காரங்க எப்பொழதுமே அவங்க நினைத்த மாதிரியே செய்துட்டு இருக்கிறார்கள்.அது ஈரானாக இருந்தாலும் சரி, சதாம் உசேன் விசியம் ஆகட்டும், இல்லை ஆப்கான் போர் ஆனாலும் அவங்க சொன்னாக்கேட்டுக்கணும்.நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டங்கனு தெரியும். சரி அதுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரைக்கும் ஊமையாகத்தான் இருக்கணும்.சரி என்ன தான் தீர்வு என்றால் அது திரைப்படம்தான். படம் எடுத்த மக்கள் பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அலைந்தேன். ஒரு தயாரிப்பாளாரும் கிடைத்து விட்டார் என்றால் பாருங்க.ஹீரோவா கிளிண்டன் தான் போடால் நல்லா இருக்கும் என பார்த்தால் அவரும் தேதி இல்லை, ரொம்ப பிசி என்று சொல்லி விட்டார். விசாரித்தில் அவரு படத்துக்கு விட பாப்பாகளுக்கு தான் தேதி கொடுக்கவே சரியாக இருக்கு என தெரிந்தது.அந்த வம்பு நமக்கு எதற்கு அப்பா, இப்பொழது பாப்புலரு யாருனு பார்த்த நம்ம புஷ்தான் முடிவுச்செய்திட்டு, கேட்டதுமே சரி என்று ஒத்துக்கிட்டார் என்றால் பாருங்க.எப்படியோ கதாநயாகியாக ஒரு கிராமத்து தேவதை தேர்வுச்செய்திட்டு படத்த ஆரம்பித்து விட்டேன். புஷ்சும் நல்லவே நடித்தார்,அவருக்குப்போய் நடிப்பு சொல்லித்தராணுமா!!! அவருந்தான் ஆயில் கிணறு மேலிருக்கின்ற ஆசையில் சதாம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருக்கிறார் என்று ஈராக் கைப்பற்றியதுப்பொழது நடித்த நடிப்பை பார்த்தோம் என்று கூறுவது காதில் விழுகிறது. எப்படியோ படத்தை எடுத்துவிட்டேன்.ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.படத்தை முழுவதும் இந்தியாவிலே எடுத்துவிட்டதால் நம்ம இயக்குநர்கள் போல் வெளிநாட்டை தயாரிப்பாளார் செலவில் பார்க்கணு ஆசையா இருந்தது.அந்த ஆசை நிறைவேற்று மாதிரி, நம்முட்டைய ஹீரோக்களுக்கு எப்படி ஐஸ்வர்யாவுடனோ,மல்லிகாவுடனோ ஒரு பாடலில் ஆடவில்லை என்றால் எப்படி உறக்கமே வராதோ, அதுமாதிரி நம்ம புஷ்சுவிற்கும் ஹாலிவுட் நடிகையுடன் ஆடியே ஆகணும் என்று அடம்பிடித்தால் வசதியாக போய்விட்டது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுப்போல் எனது ஆசை நிறைவேற்றிக்கொண்டேன்.படத்தை முடித்த கையுடன் வெளியிடக்காத்திருக்கிறேன்,எங்கும் சிவாஜி என்பதால் திரையரங்கு கிடைக்கவில்லை. பாடல் காட்சியை மட்டும் உங்ளுக்காக படைத்துள்ளேன்.பார்த்து மகிழவும்,இல்லை இல்லை படித்துப்பின் பார்த்து மகிழவும்.உங்களால் முடிந்தயளவு புஷ்சை ஆடச்சொல்லவும்,இல்லை என்றால் ஆட்டி வைக்கவும்,ஆம் அதுதான் நம்ம படத்தின் தலைப்பு மட்டுமல்ல விருப்பம்.நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும்.பாடலைக்காண இறுதியாகயுள்ள வார்த்தையோ,படத்தையோ அழுத்தவும்(press).


பாடலோ அல்லது எனது கருத்தோ உங்கள் உள்ளங்களை புண்ணாக்கிருந்தால் மன்னிக்கவும்





பாடலைப்பார்க்க இந்த வார்த்தை அல்லது மேலேயுள்ள படத்தை அழுத்தவும்/press செய்யக.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை