Tuesday, December 23, 2008

படமும் பாதிப்பும் - 23/12/08

இந்த படத்திற்கு ஏற்ற கவிதை




படம் ; "கடையம் ஆனந்த்"



இந்த படத்தைப் பார்க்கும்பொழுது பல எண்ண அலைகளை என் உள்ளத்தில் விளைவித்துவிட்டது.

இதை கவிதை என்பதைவிட கிறுக்கல்கள் என்றே எனது அகம் அழைக்க விழைக்கிறது.


தீவிரவாதம் ஆகட்டும், மதத்தின் பெயராலும் மண்ணிலே மனிதர்கள் மரிப்பதைக் காணுக்கையில் கண்ணீர் வருவதும், கடவுளை வேண்டுவதும்,அவருக்கு
ஆதரவு நல்க கூடாது என்று ஒவ்வொரு முறையும் என்னை நானே சொல்லிக்கொள்வதும்
முடிவு எடுத்துக்கொள்வதும் உண்டு.


1.முதலாவது கிறுக்கல்



பாவங்கள் எல்லாம்
படமெடுக்கையில்
பாரினில் மனிதர்கள் எல்லாம்
பரிதவிக்க தான் வேண்டும்.


வறுமையின் கொடுமையை வார்த்தையால் வடிக்க முடியாது.

இது நான் படித்த பல கவிதைகளின் கலவை என்றும் பாதிப்பு என்றும் கூறமுடியும்.

இந்த வரிக்கு உரிமை ஊதியம் (Royalties) என்னால் கேட்க இயலாது.சும்மா


2.இரண்டாவது கிறுக்கல்


வாழ்க்கையில்
வறுமையை
உயர உயர
உலகிலுள்ள
உயிர்களின்
உடைகளெல்லாம்
உரியுமாம்.


வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்துக்கிடப்பதுதான் வெட்கம் என்ற வைர வரிகளை மட்டுமல்ல
எழுச்சியின் எண்ணத்தையும் எடுத்து உரைக்கிறது எனக்கு இந்த புகைப்படம்


3.முன்றாவது கிறுக்கல்



எழுந்துப் பார்
ஏமாற்றங்களுக்கு மட்டுமல்ல
ஏளனங்களும் உன்
எதிர்வர அஞ்சும்.
எதிரிகளும் உன்
காலடியில்
கண்ணீர் விட்டு
கரைய கூடும்.


இலங்கை என்ற சொல்லை இயம்ப பொழுதே இதயத்தில் இன்னலை வரச்செய்கிறது
ஈழம் என்கின்ற பொழுது ஈரம் சுரக்காத இதயங்கள் இந்தியாவில் மட்டுமல்ல,
அன்னைப்பூமியில் அவதாரம் எடுத்து அலைவதும், கட்சிக்கு காவடி எடுத்துக்கொண்டு இருக்கும் கயவர்களை காணும்பொழுது கண்ணீர் தான் வருகிறது.
கடவுளே உன்னை மனம் உருகி வேண்டுவது இது தான்,
அவர்கள் அன்னையின் மடியில் பிறக்கவும் வேண்டாம்.
தமிழர் என்று எண்ணிக்கையில் கூட்டவும் வேண்டாம்



4.நான்காவது கிறுக்கல்



அகதியாய்
அனாதையாய்
அன்னைப்பூமியே, உன் முன்னே
ஆதரவுற்று நிற்கிறேன்.
அவ்வப் பொழுது, நீயும்
அலையாய் அலையாய்
ஆர்பரித்து எழுகின்றாய்.நானும்
அக மகிழ்வதுண்டு. நீயோ
அலை அடித்து பின்
அமைதி ஆகிவிடுகிறாய்.இதுவோ
அடிக்கடி நிகழ்வுண்டு
அதைக் கண்டு
ஆறுதல் தான் அடையமுடிகிறது
அல்லலை
அகற்ற யாருமில்லை.
ஆதரவுக்கர நீட்டவும்
ஆளும் இல்லை
துன்பம் மட்டும்
தொடர்க்கதையாய்
தொடர்வதுண்டு எங்களுக்கு
துயரை துடைக்க தான்
தமிழரும் யாருமில்லை,
தலைவர்களும் யாருமில்லை
தரணியிலே
குண்டுமழையில்
குற்றுயிராய் கிடைக்கிறேன்
குடல் வற்றி
பசியால் பரிதவிக்கிறேன்
பார்ப்பதற்கு யாருமில்லை
பாதுகாக்கும் யாருமில்லை
புல் பூண்டு கூட முளைக்க முடியாமல்
பாலைவனமாய் போகிறது, இந்த
பூமி பகைவர்களால்
எப்போழுது இதை
புரிந்துக்கொள்ள போகிறாய் ?
அன்னைப்பூமியே
அலையாய்
ஆர்பரித்து போதும்
சனாமியாய் எப்போழுது எழுந்து
சீறப்போகிறாய் ? எங்களையும்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்க
செய்ய போகிறாய்.


சிறுவர்கள் முன்னிலைப் படுத்தி எழுதுவது தான் இந்த புகைப்படத்திற்கு
சிறப்பு மட்டுமல்ல,என்னுடைய கோபம் இந்த கிறுக்கலில் கொஞ்சம்
சீறி இருக்கிறது.



5.ஐந்தாவது கிறுக்கல்




பசிக்காக
பிழைப்புக்காக
படிப்பை மறந்தோம்.

பகைவரை வெல்ல
பல நாடுகளில்
படைகள் ஆகிறோம்.

காமத்திற்காக சில
கயவர்களுக்கு
காவு கொடுக்கப் படுகிறோம்.

பணத்திற்காக இன்னும்
பல பாவங்களுக்கு
பாசமற்ற ,
பரிவற்ற மனிதர்களால்
பலி கொடுக்கப் படுகிறோம்.

சமுதாயமே கொஞ்சம்
சீறி எழுந்து, எங்களை
சித்ரவதை சிறையிலிருந்து மீட்டிடு.

கூடுதல் இன்னும் ஒரு கிறுக்கல்

வறுமையை விரட்டுவதாகவும்
வசந்தத்தை வரவழைப்பதாகவும்
வாக்குறுதி தரும்
தலைவர்களை நம்பி,
உடையின்றி
உணவின்றி
வாழ்க்கைப்பாலைவனத்தில்
மாற்றுமழை வரும் என்று
வருடங்கள் போனால் என்ன
வயோதிகம் வரை
காத்திருப்போம்.



மனம்: இந்த படத்திற்கு ஏற்ற கவிதை ப்ளீஸ்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை