
வியர்வை சிந்திக் கட்டிய
வீட்டில் வசதியுடன்
வாழ்கிறது சிலந்தி

சோர்ந்த பொழுதெல்லாம்
சிறகு விரிக்கச்
சொல்கிறது விசிறி

குளம் நிறைய நீர்
குருவி வந்து குடித்தது
குறைய வில்லை இன்னும்

பரந்து விரிந்த மரம்
பறந்து வந்த பறவை
போட்டது பட்டா
****************************
இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.