முத்தம் கொடுத்தும்
சிறுத்துப் போகிறாள்.
குத்து குத்து தாம்பளம்
விளையாடினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.
கையில் பப்பு கடைந்து
கிச்சு கிச்சு மூட்டினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.

கடைசியாய்
அவளே சொன்னாள்
மீசை குத்துப்பா
குறைத்து விடாலாமென்று
கத்திரியை எடுத்தால்
அவள் அம்மா தடுக்கிறாள்
அது ஒன்று தான் அழகு
அதுல கை வைக்காதீங்க
( படித்ததில் பிடித்தது: செஞ்சி தமிழினியன் அவர்களின் கவிதை )