உலகில் நிதமும்
கலகம் நிகழும்
காட்சியைக் கண்டு,
கவலைக் கொண்டு,
கண்ணீர்யுற்று,
கடவுளைச் சாடுகின்றோம்.
இயற்கையைப் பார்
வாழ்க்கையைக் கற்றுத் தரும் எனும்
இறைவனின் தத்துவத்தை
இதயத்தில்
இருத்திக் கொள்ள
மறக்கவும்
மறுக்கவும் செய்கின்றோம்.
மண்ணில்
மரங்கள் எல்லாம்
மாயமானப் பின்
மழையைப் பொழியவில்லை என்று
மாயவனை
மனம் நோந்துக் கொள்வது
மடமை அன்றோ
மனித
மனங்கள் எல்லாம்
மரத்துப் போன பின், இந்த
மண்தான் என்ன செய்யும்
மயானமாக தானே
மாறச்செய்யும்
இன்பத்தையும் துன்பத்தையும்
இணைந்தே பகிர்ந்துக் கொள்ள
இருபாலரைப் படைத்து
இல்லறம் எனும்
இனிய வழியைக் காண்பித்தான்
இறைவன்
இச்சையை வாழ்க்கையின்
இலக்கு என
இட்டுக்கொண்டு,
இமைப்பொழுதும்
இன்புற்று
இருக்க மாதுவையும், மதுவையும் நாடி
இடுகாட்டில்
இடம் பிடிக்க அலைக்கின்றோம் நாம்.
காலில்
காயம் என்றால்
கண் கரைகிறது
கை விரைகிறது, இந்த
உடல் நிகழ்வே
உலகத்தின் உயிர்த்துடிப்பு என்று
உணர்வது எப்பொழுது ?
உள்ளம் என்பதை
உயிர்களின்
உள்ளே வைத்து
உருவம் கொடுத்து
உயிர் வாழ மட்டுமல்ல
துன்பம் நேர்கையில்
துயர் துடைக்கவும்
தோள் கொடுக்கவும்
துணிந்திட தான்.
இயற்கையும்
இறைவனும் ஒன்று தான்
அறிவை நம்புகிறவன்
இயற்கை நேசிப்பான்
இறைவனை நம்புகிறவன்
உயிர்களை நேசிப்பான்
மலராகட்டும்
மரமாகட்டும்
மண்ணில்
விதைப்பது தான்
விளையும் என்னும்
விதியின் வினைப்படி
மனித மனங்களில்
அன்பை விதைப்போம்
அகிலத்தை செழிக்க வைப்போம்