Tuesday, November 25, 2008

மாவீரர் நாள் வாழ்த்தும்---- சிவரமணி அவர்களின் கவிதையும்




தமிழன் என்றால்
வீழ்ந்தே சாவான் என்ற
வரலாற்றை மாற்றிய
வீரர்களே உங்களுக்கு எனது
வீர வணக்கங்கள்

உரிமைக்காக
உயிர் துறந்தாலும், நீங்கள் எங்கள்
உள்ளங்களில் என்று என்றும்
உறங்கும் தெய்வங்கள்

உங்களின்
கல்லறையும் கண்ணீரும்
கடமையாக
கயவரின்
கதை முடித்த வரலாற்றைச் சொல்லும்

உங்களின்
உதடுகள் மட்டுமல்ல
உள்ளமும் ஒவ்வொரு மணித்துளியும்
உச்சரித்திட்ட ஈழம்,
உருவாகும் நிச்சியம் என்னும்
உணர்வோடு
உறங்குங்கள் வீரர்களே

ஆண்டவனிடம்
அனுதினமும்
பொன்னும் பொருளும்
வேண்டி இறைஞ்சுவதில்லை
வேதனைத்தீயில் வாடும் மக்களுக்கு
விரைவில் விடியல் ஒன்று
விடிந்திடவே வேண்டுகிறது

கடமைக்காக
கல்லறையில்
கண்ணுறங்கும் வீரர்களை
காண்கையில்
கடவுளே உனக்கு
கருணையும் பிறக்காதா ?

இன்னலுறும்
இதயங்களை நோக்கையில்
இறைவா உனது
இமைகளும் திறக்காதா ?
இரக்கம் பிறக்காதா ?

அன்னியர் அகதி ஆக்கும்பொழுது
ஆத்திரம் வருகிறது
அன்னைப்பூமி ஆதரிக்க மறுக்கும்பொழுது
அழுகை வருகிறது.

கதற கதற
கற்பழிக்கப்பட்ட,
கடத்தப்பட்ட,
கொல்லப்பட்டவர்களின்
உண்மைகள் உரைக்கப்படும்பொழுது
உள்ளம் கூட உறைந்துவிடும்.ஆனால்
உலகமும் உறவும் அதைக்கேட்டு
ஊமையாய் இருப்பதாய் பார்க்கையில்
உயிரற்ற பொருளாய் என்னையும் படைத்திட்டால்
உணர்வற்று இருப்பேன் என்று
உரைக்க தான் முடிகிறது.





---------------------------------------------------------------


சிவரமணி அவர்களின் கவிதை

-------------------------------------------------------------



என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
என் எதிரிக்கு எதிராய்ப்
போரைப்
பிரகடனம் செய்ய
என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
எனினும் நான்
தளரவில்லை

எனது
கறைபடிந்த கரங்களின்
சாதகக் கோடுகள்
மறைந்து விட்டன்.
இங்கேயொரு
புதிய கோடு
வானிற்கும் மண்ணிற்கும்
நீளம் அளக்கவல்ல
உனக்கும் எனக்கும்
உயரம் காட்டவல்ல
இங்கேயொரு
புதிய கோடு

எனது துப்பாக்கி
பறிக்கப்படலாம்
எனது கைக்குண்டு
வெடித்துச் சிதறலாம்
ஆனால்
அந்தக் கோடு
அழிக்கப்படாது

ஆசையும் கனவும்
நிறைந்த என் இதயம்
பிளக்கப்படலாம்
ஆனால் எங்கள்
கறைபடிந்த
கரம் வரைந்த
அந்தக் கோடு
அழிக்கப்படாது
ஆனால்
எம் குழந்தைகளால்
கடத்தப்படலாம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை