Wednesday, November 26, 2008

வார்த்தை விளையாட்டு




வார்த்தை
வரம்பு மீறும்பொழுதும்,
வதைக்கும் பொழுதும்
வன்முறையாக
வடிவம் கொள்ளும், பின்
வருந்திப் பயனில்லை.

வார்த்தை என்பது ஒரு
வலி நிவாரணி
அதை அங்காடிகளில் தேடி
அலைய வேண்டாம்
அது அனைவரிடமும்
அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

விவாகங்கள் எல்லாம்
விவாகரத்துகளை நோக்கி
வீர நடை போடுகையில்
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரிடம் காரணத்தைக்
கேட்டுப் பாருங்கள்
வார்த்தைகளால்
உள்ளத்தை
வருட தவறும் மனிதர்களால்
வாழ்க்கையே வெறுத்துப்போய்
உறவுகள் எல்லாம்
உடைந்துப் போகும் துயரத்தை
உரைக்கும்.

வலி குறைக்கும்
வார்த்தைகளை நவின்றால்
நண்பர்கள்
நிறைய உருவாகின்றார்கள், அதுவே
வலி கொடுக்கும்
வார்த்தைகளை விளம்பினால்
விரோதிகள்
விரைவில் உருவாகின்றார்கள்

வார்த்தை விளையாட்டில்
வித்தியாசத்தைப் பாருங்கள்
வினோதமாக இல்லை.

இயந்திர வாழ்க்கையில்
இல்லத்தாரின்
இதயங்களின் இலக்கு எல்லாம்
பணத்துக்குப் பின்னே
பயணக்கையில்
வார்த்தைத் தவத்துக்காக
வீற்றிருந்து வாடும்
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசமா படரும்.

வார்த்தைகளால்
வருடினால்
உறவுகள் மட்டும்
உறுதியாகுவதில்லை
வலி கூட தெரிய
வழி இல்லாமல் போகிறது.

வார்த்தை சாலங்களுக்கு
வசப்பட்டு பின்
விசனப்படும்
வாக்காளர்கள் உள்ளவரை
வானத்தைக் கூட
தொட முடிகிறது, எங்கள்
தலைவர்களுக்கு


சொல்லுக்கும்
செயலுக்கும்
சம்பந்தம் உண்டு என்பதை
சிந்திக்காத வரை
சங்கடங்கள் எல்லாம் உண்டாக தான்
செய்யும்.

இணையத்திலும்
தொலைகாட்சியிலும்
தொலைந்துப் போகும் மனிதர்களால்
வார்த்தைக்குக் கூட
பஞ்சம் வந்து விடுகிறது
பலரின் இல்லங்களில்

வார்த்தை என்பது
வரம் கொஞ்சும்
வாரித் தான் கொடுங்கள்
வாழ்க்கையும்
வளமாக்குங்கள்.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை